திங்கள், 27 செப்டம்பர், 2010

2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)

செந்நிறக் கோளுக்கு மீண்டும்
உந்தப் போகுது நாசா
தள ஊர்தி யோடு !
தானாக ஊர்தியை இறக்க
தலைகீழ் ஏவுகணைகள்
ஈர்ப்பு விசை எதிர்த்து
கீழிறக்கும் வானிறக்கியால் !
தாறுமா றான களத்தில்
ஆறு சக்கரத் தேர் உலவும் !
நீள மானது தளவூர்தி !
கனமானது !
நூதன மானது
சாதனை வாகனம் !
இதுவரை ஏவப் படாத
புதுமைத் தள விஞ்ஞான ஆய்வகம் !
கதிரியக்க மின்சக்தியும்
பரிதி வெப்ப மின்கலமும்
கருவிகளை இயக்கும் !
செந்நிறக் கோள் தகவல் யாவும்
முந்தைய விண்சுற்றி மூலம்
வந்தடையும் நமது
வையகத்தை !
"உச்சத் தரமான தொலை அளப்பு மூலம் (High Quality Telemetry) தளவூர்தி (செவ்வாய் ஈர்ப்பில்) புகுவது, இறங்குவது, தடம் வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளை தெளிவாக அறிவது அவசியமானது. செவ்வாய்க் கோள் விண்வெளித் திட்டத்தில் அதுவே மிக்க சவாலான தீரச்செயல் நுணுக்கம் ! நாங்கள் தேர்ந்தெடுத் திருக்கும் இறங்கு பாதை பிரச்சனைகள் குறைந்த முறையில் தகவலை அனுப்பும் பெரும் தகுதி யுள்ளது."
•பியூக் லி (Mission Mars Exploration Program at JPL)
"செவ்வாய்த் தளத்தைத் தொடும் தருணத்துக்கு முன்னும், பின்னும் நேரும் முக்கிய நிகழ்ச்சிகளைத் தகவல் மூலம் அனுப்பும் பல்வேறு தகுதிப் பாடுகளை ஒப்பு நோக்கியே தேர்வு முறைகள் தீர்மானிக்கப் பட்டன. குறுகிய பாதையில் இறக்கினால் இரண்டு விண்வெளிக் கப்பல்கள் (NASA's Mars Odyssey & Mars Reconnaissance Orbiter) தொடர்ந்து தளவூர்தியைக் கண்காணிக்க வேண்டும். மாறாக நெடிய பாதையில் இறக்கும் போது தகவல் அனுப்புப் பூமிக்கு நேரடித் தொடர்பு கிடைக்கிறது."
மைக்கேல் வாட்கின்ஸ் (Mission Manager, NASA Jet Propulsion Lab).
"நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது".

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

"மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள். அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது. உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள •போபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது. மக்கள் •போபாஸைக் காணும் போது 'யார் அதை அங்கு வைத்தவர்' என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்."

அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

"1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது. ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம். ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் "பிரிப்பான்களைத்" (Oxidants) துண்டித்துவிடும். செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம். ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்."

வில்லியம் பாயின்டன், [William Boynton] •பீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

2011 ஆண்டின் இறுதியில் நாசா அனுப்பும் அடுத்தோர் செவ்வாய்த் தளவூர்தி !

2.3 பில்லியன் டாலர் நிதிச் செலவில் (2010 நாணய மதிப்பு) நாசா 2011 நவம்பர் அல்லது டிசம்பரில் மீண்டும் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்து நவீன தளவூர்தி ஒன்றைப் புதிய முறையில் இறக்கப் போவதாகத் தீர்மானித்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் முடிவு செய்யப் பட்ட அத்திட்டம் விண்வெளி மீள்கப்பல் நிறுத்த நீடிப்பாலும், தளவூர்திப் பயிற்சிக் காலம் போதான்மையாலும் தாமதமாகித் தற்போது 2011 ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நாசா இதற்கு முன்பு வெற்றிகரமாகச் செவ்வாய்த் தளத்தில் இறக்கிய மூன்று தளவுளவிகளின் (Spirit, Opportunity & Phoenix Lander) அனுபவத்தில் இப்போது அவற்றை விட முற்போக்கான "செவ்வாய் விஞ்ஞான ஆய்வு வாகனம்" (Mars Science Laboratory, Curiosity) எனப்படும் தளவூர்தி ஒன்றை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. அந்த தளவூர்தி செவ்வாய்க் களத்தில் நீண்ட காலம் ஆய்வுகள் நடத்தப் போகிறது. அந்த செந்நிறக் கோள் பயணத் திட்டம் 2011 ஆண்டு நவம்பர் அல்லது டிசம்ரில் பிளாரிடா கனாவரல் முனையிலிருந்து (Cape Canaveral, Florida) ஏவப்பட்டு ஆரம்பமாகும். செவ்வாய்க் கோளை அந்த விண்சிமிழ் 2012 ஆகஸ்ட்டில் நெருங்கிச் சுற்ற ஆரம்பிக்கும்.

2011 நவம்பர் அல்லது டிசம்பரில் ஏவப்படும் செவ்வாய் விண்சிமிழ் 2012 ஆகஸ்டு மாதம் செந்நிறக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. விண்சிமிழின் எடை 900 கி.கிராம் (1980 பவுண்டு). திட்டப்பணி செவ்வாயில் 686 பூமி நாட்கள் நீடிக்கும். தளவூர்தியின் முக்கிய ஆய்வு செவ்வாய்ச் சூழ்வெளியானது நுண்ணுயிர் ஜீவன்களை வளர்ப்பிக்கும் தகுதி உடையதா, அவற்றைப் பாதுகாக்கும் தன்மை உள்ளதா என்பதைக் காண்பதே. அதாவது செவ்வாய்க் கோள் தோன்றிய காலத்தில் வாயுச் சூழ்வெளியும், நீர்மை வளங்களும் வசதி செய்து உயிரினங்கள் வசித்தனவா என்பதை நிரூபித்துக் காட்டுவதே ஆகும். முக்கியமாக இந்தச் செவ்வாய்க் கோள் திட்டத்தில் நான்கு குறிப்பணிகள் நிறைவேற்றப்படும்.

1. உயிரினம் எப்போதாவது செவ்வாய்த் தளத்தில் உதித்துள்ளதா ?

2. செவ்வாய் பருவ நிலைப் (Climate) பண்பாடு எவ்விதம் இருந்து பிறகு மாறியுள்ளது ?

3. செவ்வாய்க் கோளின் தளவியல் (Geology) பண்பாடுகளை உளவி அறிவது.

4. செவ்வாய்க் கோள் தேடலில் அடுத்து வரப் போகும் மனிதப் பயணத்துக்குத் தயார் செய்வது.

நாசா திட்டமிட்டிருக்கும் ஐந்து விண்வெளிக் குறிப்பணிகள்.

2011 நவம்பர் அல்லது டிசம்பரில் நாசா செவ்வாய் விஞ்ஞான ஆய்வகத்தை அட்லாஸ் V- 541 ராக்கெட்டில் பிளாரிடா கனாவரல் ஏவுகணை முனையில் அனுப்புவதாகத் திட்டமிட்டுள்ளது. இந்த முறை ராக்கெட்டில் செவ்வாயைச் சுற்றும் விண்கப்பல் எதுவும் அமைக்கப் படாமல் வெறும் தளவூர்தியைத் தாங்கிச் செல்லும் விண்ணூர்தி மட்டும் ஏற்றிச் செல்லப் படும். தளவூர்தி செவ்வாய்த் தளத்தில் இறங்குவதை, ஏற்கனவே பல மாதங்கள் சுற்றிவரும் செவ்வாய்க் கண்காணிப்பு விண்சுற்றி (NASA's Mars Reconnaissance Orbiter) கவனித்துத் தளவுளவி சேமிக்கும் தகவலைப் பூமிக்கு அனுப்பும்.

1. செவ்வாய்த் தளவூர்தி எவ்வளவு பெரியது ?

புதிய தளவூர்தி பழைய நான்கு விதமான தளவுளவிகளை (Spirit, Opportunity, Sojouner, Phoenix Lander) விடப் பெரியது, நீளமானது, கனமானது, நூதனமானது. அதன் நீளம் : 10 அடி (3 மீடர்). வாகனம் செவ்வாய்த் தளத்தில் எதிர்ப்படும் 2.5 அடி உயரக் கற்களைக் கடந்து செல்லும் திறன் உடையது. தளத்தில் 600 அடி (200 மீடர்) நீளம் நகரும் ஆற்றல் உள்ளது. விஞ்ஞான உளவுக் கருவிகள் எடை : 80 கி.கிராம் (176 பவுண்டு). வாகனத்தின் உச்ச வேகம் : மணிக்கு 90 மீடர் (300 அடி) தூரம். சராசரி சாதாரண வேகம் : மணிக்கு 30 மீடர் (100 அடி) தூரம். 2 வருடத்தில் தளவூர்தி சுமார் 20 கி.மீடர் (12 மைல்) தூரம் பயணம் செய்யும் என்று சுமாராகக் கணிக்கப் படுகிறது.

2. நூதனத் தளவூர்தி எவ்விதம் இறங்கப் போகிறது ?

இதுவரை செவ்வாய்க் கோளில் இறங்கிய தள வாகனங்கள் அனைத்தும் காற்றடைத்த பந்துக் கொத்தில் (Airbag Cushion Balls) அமைக்கப் பட்டு பாராசூட் இறக்கிக் கீழே விடுவிக்கப் பட்டன. தரையில் விழுந்த பந்துக் கொத்து தவ்வித் தவ்வி இறுதியில் நின்று வாகனம் வெளிவந்தது. புதிய நூதனத் தளவூர்தி ஹெலிகாப்டரில் சாதனம் இறக்கும் "வானிறக்கு முறையில்" (Sky Crane Lowering) செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்கும். இந்த முறைக்கு பாராசூட், "எதிரியக்கு ராக்கெட்" (Retro-Rocket), வானிறக்கு வடங்கள் தேவைப்படும். வாகனத்தை இறக்கும் விண்சிமிழை முதலில் பாராசூட் சுமந்து கீழிறக்குகிறது. பிறகு விண்சிமிழின் எதிரியக்கு ராக்கெட்டுகள் இயங்கி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசைக்கு எதிராக மெதுவாக்கி அதன் இழுப்பைக் குறைக்கின்றன. அதன்பின் "வான் கீழிறக்கி" (Sky Crane) வடங்களில் கட்டப்பட்ட தளவூர்தி வாகனம் இறங்கித் தளத்தில் ஆறு சக்கரங்கள் படிய ஏதுவாகிறது.

3. தளவூர்தியில் உள்ள சாதனக் கருவிகள்

செவ்வாய்த் தளவூர்தியில் 10 கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. அவை மண், பாறை, சூழ்வெளியைச் சோதிக்கும் திறமுடையவை. தொலை விலிருந்து பாறைப் படிவை வாயுவாக்கும் வல்லமை உடைய ஒரு லேஸர் சாதனம் உள்ளது. அடுத்தோர் கருவி ஆர்கானிக் கூட்டுகள் உள்ளனவா என்று சோதிக்கும். பிறகு தொலைவில் உள்ளவற்றைக் காணவும், பட மெடுக்கவும் தேவையான புதுவிதக் காமிராக்கள், தளத்தைத் தோண்டும் கருவியும், அள்ளும் ஓர் அகப்பையும் உள்ளன. எடுத்த பொடி செய்து பாறைகளின் உட்பொருளைப் ஆய்வு செய்திட இரசாயனக் கருவிகள். உயிரினத்தை வளர்ப்பிக்கும் ஆர்கானிக் கார்பன் கூட்டுகள் (Organic Carbon Compounds - Carbon, Hydrogen, Nitrogen, Oxygen, Sulfur & Phosphorus) இருப்பைக் காணும்,. உயிரியல் பண்பாடுகளை (Biological Processes) நோக்கும் தளக் கலவைகளை (Chemical, Isotopic, Minerological Composition of the Martian Surface) தனித்து அறிவது. 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் செவ்வாய்ச் சூழ்வெளி வளர்ச்சி/தளர்ச்சிக் கால நீட்சி வரிசையைக் காண்பது. செவ்வாய் நீரோட்டத்தின் தற்போதைய நிலை, பரவல் வரலாறு, நீர், கார்பன் டையாக்ஸைடு சுழற்சிப் போக்கை அறிவது. செவ்வாய்த் தளத்தில் தளக் கதிர்வீச்சு, காலாக்ஸி கதிர்வீச்சு, அகிலக் கதிர்வீச்சு, பரிதி புரோட்டான் நிகழ்ச்சிகள், இரண்டாம் பிறப்பு நியூட்ரான்கள் (Surface Radiation, Galactic Radiation, Cosmic Radiation, Solar Proton Events & Secondary Neutrons) ஆகிவற்றின் பண்பாடுகளை அறிவது.

4. தளவூர்தி செவ்வாயில் செய்யப் போகும் சாதனைகள்

செவ்வாய்த் தளத்தில் உலவும் வாகனத்தின் சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொரு சக்கரமும் தனித்தியங்க வெவ்வேறு மோட்டர் உள்ளது. முன்னிரண்டு, பின்னிரண்டு சக்கரங்கள் திரும்ப தனித்தனித் "திருப்பி மோட்டார்" (Steering Motor) உள்ளது. இம்மாதிரி திருப்பிகள் இருப்பதால் தளவூர்தி நின்ற இடத்திலே 360 டிகிரி கோணத்தில் திரும்ப முடியும்.

5. தளவூர்தியை இயக்கும் மின்சக்தி ஆற்றல்

பல்துறைப் பயண கதிரியக்க உலோகத்தின் மின்கலம் (Plutonium-238 Radioactive Decay) (Multi-Mission Radioisotope Thero-electric Generator -MMRTG) ஆண்டு முழுவதும், இராப் பகலாய் 125 வாட்ஸ் (உச்ச அளவு) மின்னாற்றல் தர வல்லது. செவ்வாய்க் கோளின் மத்திய ரேகையைத் தாண்டி வாகனம் சென்றாலும் தொடர்ந்து மின்சக்தி கருவிகளுக்குக் கிடைக்கும். பரிதியின் எரிசக்தி வாகனம் மத்திய ரேகைப் பகுதிகளில் நடமிடும் போது மின்னாற்றல் அளிக்கும். தளவூர்தியின் பரிதி மின்கலம் தினம் 2.5 kwh (Kilo Watt Hour) வரை உற்பத்தி செய்யும். MMRTG கதிரியக்க மின்கலம் 2 ஆண்டுகள் வரைத் தேவைப் பட்டாலும் அதன் ஆயுள் 14 ஆண்டுகள் நீடிக்கும்.

2011 நவம்பரில் செவ்வாய் நோக்கிச் செல்லும் மூன்று வல்லரசுகள்

நாசாவின் நூதனச் செவ்வாய்த் தளவுளவியும், ரஷ்யாவின் •போபாஸ்-கிரண்ட் செவ்வாய் விண்ணுளவியும் ஏறக் குறைய ஒரே தருணத்தில் செந்நிறக் கோளுக்குப் பயணம் செய்யப் போகின்றன. ரஷ்யா ஏவுகணைச் சைனாவின் செவ்வாய் விண்ணுளவியையும் ஏந்திச் செல்லப் போகிறது. அதாவது ஒரே சமயத்தில் மூன்று பெரும் வல்லரசுகள் செந்நிறக் கோளைச் சுற்றி ஆராயப் போகின்றன ! செவ்வாய்த் துணைக்கோள் •போபாஸில் இறங்கி மாதிரி மண்ணெடுத்து முதன்முதல் பூமிக்கு மீளும் பொறிநுணுக்கத் திறனைக் காட்டப் போகிறது ரஷ்யா ! அமெரிக்கா முதன்முதல் பெருவூர்தி ஒன்றை வானிறக்கு முறையில் (Sky Crane Descent) செவ்வாயில் இறக்கித் தன் பொறிநுணுக்கத்தை நிரூபிக்கப் போகிறது. அடுத்து முதன்முதல் சைனாவின் செந்நிறக் கோள் விண்ணுளவி செவ்வாயைச் சுற்றுப் போகிறது. விந்தையான மூன்று முதல் முயற்சிகளில் எது நிறைவேறும் எது ஏமாற்றம் கொடுக்கும் என்பது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்தான் நமக்கெல்லாம் தெரியும் !



தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA, Russian Space Exploration & Chinese Websites

1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online - Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA's Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பிரபஞ்சத்தின் அற்புதங்கள்

பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல்
பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல் மனித குலத்தை அச்சுறுத்தும் விண்கற்களால் ஆபத்து நேருமா?

பெளதிகம், இரசாயனம், கணிதம், தொழில் நுட்பம், இலத்திரனியல் போன்ற பல்வேறுபட்ட விஞ்ஞானத்துறைகளுள் மிகவும் பழைமை வாய்ந்தது வானசாஸ்திரம். எமது அயல் நாடான இந்தியாவில் கூட வான சாஸ்திரம் அக்காலகட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு இயம்புகின்றது.
தற்பொழுது அமெரிக்கா, சோவியத் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு நிகராக இந்தியாவும் அண்மையில் நிலாவிற்கு சந்திராயன் என்ற பெயருடைய செயற்கைக் கோளை ரொக்கெட் மூலம் ஏவி சாதனைபடைத்தது. அம்புலியிலிருந்து சந்திராயன் அனுப்பிவைத்த தகவல்களின்படி அங்கு தண்ணீர் உள்ளது என்பது உலக விஞ்ஞானிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பண்டைய காலத்தில் வாழ்ந்த ஆசிவாதிகள் இரவு, பகல் அடுத்தடுத்து உண்டாவதையும் வடக்கு, தெற்கு துருவப் பிரதேசங்களில் நீங்கலாக ஏனைய கண்டங்களில் சூரியன் இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் பன்னிரெண்டு மணிநேரம் காட்சியளிக்கின்றமையும் கண்டறிந்தனர். வீடு நிர்மாணிப்பதற்கு முக்கிய மூலவஸ்து வாகத் திகழ்கின்ற சீமெந்து கண்டுபிடிக்கப் படாமையினால் இரவில் திறந்த வெளியில் படுத்து உறங்கினார்கள்.

இதனால் புராதன மக்கள் ஆகாயத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற சந்திரன் அடங்கலாக விண்மீன்கள், வானிலிருந்து புவியை நோக்கி மின்னல் வேகத்தில் விழுகின்ற விண்கற்கள் போன்றவற்றினால் தங்களுக்கு ஏற்படுகின்ற நன்மைதீமைகள் எவை என்பதை நன்கு உணர்ந்துகொண்டனர்.
மேலும் வானத்தில் அபூர்வமாகக் காட்சியளித்த வால்வெள்ளி! அவர்களுக்கு பெரும் கிலியை உண்டு பண்ணியது. தூமகேது தோன்றினால் தமக்கோ அல்லது நாட்டிற்கோ கெடுதல் ஏற்பட்டுவிடும் என்று முழுமையாக நம்பினார்கள்.
எனவே ஆகாயயத்தில் சூரியனை நீர்வட்டமாகச் சுற்றி வருகின்ற பூமி, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் நெட்டியூன் மற்றும் கிரகங்கள் பட்டியலில் இருந்து சர்வதேச விஞ்ஞானிகளினால் நீக்கப்பட்ட புளூட்டோ என்பனவற்றின் தாற்பரியங்கள் எவை என்பதை நோக்குவோம். அத்துடன் நட்சத்திரங்கள் விண்கற்கள், விண்துகள்கள் போன்ற பற்றியும் சிறிது ஆராய்வோம்.
அதற்கு முன் வான்வெளியில் நாம் காண்கின்ற விண்மீன்கள், கோள்கள் போன்றவற்றின் அசைவு, உருவமைப்பு, தன்மை ஆகியவற்றின் ஆராய்ச்சியே விண்ணியல் ஆகும் என்றும் கூறலாம். இது ஏனைய அறிவுத்துறைகளை எல்லாம் உள்ளடக்கிய பரந்த துறையாகும்.
கிரேக்க நாட்டு விஞ்ஞானியான அரிஸ்ரோட்டில் மற்றும் தொலமி ஆகியோர் புவி தட்டையானது அல்ல முட்டை வடிவானது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தனர். மேலும் ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து இரண்டாம் 1642ஆண்டு இத்தாலி நாட்டின் கலிலியோ என்ற விஞ்ஞானி அண்டவெளியை அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் ஆராய்ந்து மூட நம்பிக்கையை பிழையென்று நிரூபித்துக் காட்டினார்.



ஆனால் கத்தோலிக்க திருச்சபை அவர் கூறுவது பொய் என்ற அடிப்படையில் சிறைக்கு அனுப்பியது. அதன் பின்னர் இத்துறையை மிகவும் துல்லியமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் இருவர் சூரியனைப் பூமி சுற்றிவரும் பாதை வட்ட வடிவமானது அல்ல நீள்வட்டப் பாதை என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்தனர். ஆயிரத்து எழுநூற்று இருபத்தேழாம் 1727ஆண்டு பிரித்தானிய கணித விஞ்ஞானியான சேர் ஐஸாக் நியூட்டன் ஒரு அப்பிள் மரத்திலிருந்து பழம் கீழ் நோக்கி விழுவதைக் கண்டு பல உண்மைகளைக் கண்டார்.
இதன் அடிப்படையில் இவ்வுலகில் உள்ள பொருட்கள் யாவும் ஒன்றையொன்று கவருகின்றன என்றும் அறிந்துகொண்டார். அதன் பின்னரே ‘நியூற்றன்ஸ் விதி விஞ்ஞானத் துறையினரின் பயன்பாட்டிற்கு அறிமுகமானது. அதன் பின்னர் தோன்றிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் பயனாக மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. சில விண் மீன்களிலிருந்து வெளியேறும் ஒளியானது புவியை வந்தடைய இருபது கோடி வருடங்கள் செல்கின்றன என்பதையும் அந்நட்சத்திரம் நிலைகொண்டுள்ள தொலைவை ஒளி ஆண்டு அலகில் கூறி வைத்தனர்.

அக்காலகட்டத்தில் ரொக்கெட்டோ செயற்கைக் கோளோ கண்டுபிடிக்கப்படவில்லையென்பதனால் வேற்றுக் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி அனைத்தையும் அதிசக்தி உயர்ந்த தொலைநோக்கி மூலம் தான் விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள முடிந்தது. நிலாவின் மேற்பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் மற்றும் சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள ரம்மியமான வளையங்களையும் கண்டுவியந்தனர்.
ஒரு நட்சத்திரத்தை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தொலைநோக்கியினூடாகப் பார்த்தாலும் வெறும் கண்ணால் நோக்குவது போல அது ஒரு ஒளிப்புள்ளியாகவே தென்படும். ஏனெனில் விண்மீன்கள் புவியிலிருந்து கோடிக்கணக்கான ஒளியாண்டு தொலை தூரத்தில் இருப்பதே பிரதான காரணியாகக் கொள்ளலாம். பதினான்கு கோடி எண்பத்து எட்டு இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள சூரியனின் ஒளி பூமியை வந்தடைய சுமார் எட்டு நிமிடங்கள் எடுக்கின்றன.
சாதாரண ஒளிக்கதிரை ஓர் அரியத்தின் ஊடாகச் செலுத்தினால் அவ்வொளியில் வானவில்லில் தோன்றும் ஏழு வர்ணங்களையும் வெளிப்படுத்தும் என்பதை விஞ்ஞானிகளான ஐஸாக் நியூற்றன் சி.வி. இராமன் போன்றவர்கள் நிரூபித்துக் காண்பித்தனர்.
இது வரை காலமும் பூமியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தவாறு ஆராய்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் அண்டவெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் விண்வெளி மையத்தில் இருந்தவாறு வேற்றுக் கிரகங்களின் பலவிலைமதிக்க முடியாத தரவுகள் பெறப்படுகின்றன.

இனி சூரியனை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்ற பூமியைப் பற்றி சிறிது ஆராய்வோம்.
பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான வட்டமாக இருப்பதில்லை. இருதுருவங்களில் சிறிது தட்டையாகவும் கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப்பகுதியில் சற்று படுத்தும் இருக்கின்றது. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் பன்னிரண்டாயிரத்து அறுநூற்று எண்பத்து மூன்று கிலோ மீற்றராகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் முந்நூற்று அறுபத்து ஐந்தே கால் நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளென்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு, பகல் உண்டாவதும், சூரியனைச் ணி|Zரிதினால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன.


அடுத்து சந்திரனைப் பார்ப்போம். சந்திரன் பூமியின் உப கிரகமாகும். ஜீவராசிகளுக்கு சூரியனைப் போல் சந்திரன் அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால் சந்திரன் இல்லையென்றால் குளிர்ந்த நிலா வெளிச்சத்தை நாம் கண்டுகளிக்க முடியாது. பூமி சூரியனைச் சுற்றிவருவது போலச் சந்திரனும் புவியைச் சுற்றி வருகின்றது. பூமியில் ஒருவன் ஒரு கல்லை அறுபது மீற்ற உயரத்திற்கு எறிவானெனின் சந்திரனில் முண்ணூற்று அறுபது மீற்றர் தூரத்திற்கு எறிவான். சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியில் உள்ளதைவிட ஆறிலொரு பங்காகும்.
பூமியில் சூரிய வெப்பத்தை வாயுக்கள் ஓரளவு தடுத்து குறைக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாத படியினால் சூரியக் கதிர்கள் விழுகின்ற பகுதியில் வெப்பநிலை கூடவே காணப்படும். ஏனைய பகுதிகளில் துருவப் பிரதேசங்களில் உள்ள உஷ்ண நிலையைக் கொண்டிருக்கும். தொலை நோக்கி வாயிலாக சந்திரனை உற்று நோக்கினால் அதன் மேற் பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் அவதானிக்கலாம். இதுவே எங்களுக்கு பாட்டி வடைசுடுவது போன்று காட்சியளிக்கின்றது.
சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே அளவு நேரத்தில் அது தன்னைத்தானே சுற்றுகிறது. இதனால் பூமியில் உள்ளோர் நிலாவின் ஒரு பகுதியைத்தான் எப்பொழுதும் காணக்கூடியதாகவுள்ளது.
இனி புதன் பற்றி அறிவோம். இதனை ஆங்கிலத்தில் ''மெர்க்கூரி'' என்று அழைக்கின்றனர். சூரியனுக்கு மிகவும் அண்மையில் நிலைகொண்டுள்ள கிரகம் புதனாகும். அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம் நான்காயிரத்து எண்ணூறு 4800கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது.

புதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர எண்பத்தெட்டு நாட்கள் செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு, பகல் மாறி மாறிக்கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்டநாட்களுக்கு இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் நானூறு பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ இருநூற்று எண்பது பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும்போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒருசிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புதசந்திரணம் என்று அழைக்கின்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்திலுள்ள தொலைநோக்கி வாயிலாக புதனை உற்று நோக்கினால் வளர்பிறை, தேய்பிறை பூரணை, அமாவாசை நிகழுவதைக் காணலாம். இப்பிரபஞ்சத்தில் நிகழுகின்ற அற்றபுதங்களை கண்டுகளிக்க உறுதுணை புரிகின்ற தொழில்நுட்ப கருவிகள் நவீன முறையில் கண்டுபிடிக்கப்பட்டே வருகின்றன.
சுக்கிரனை (VENUS) ஆராய்வோமாகில் இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் பன்னிரெண்டாயிரத்து முன்னூற்று இருபது 12320கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர இருநூற்று இருபத்து நான்கு நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகதான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.

இறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு ஜூன் ஆறாம் திகதி நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர். எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச்சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வென்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.
இனி அங்காரகன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய் (MARS) பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு அறுநூற்று எண்பத்தேழு நாட்கள் எடுக்கின்றது. தன்னைத்தானே சுற்ற இருபத்து நான்கு மணி நேரமும் முப்பத்தேழு நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும். பூமியின் அச்சு இருபத்து மூன்று அரை பாகை சரிந்துள்ளது.

செவ்வாய் தன்னைத்தானே சுற்றும் அச்சு இருபத்து நான்கு பாகையில் சரிந்துள்ளமையினால் பருவகாலம் புவியை ஒத்ததாகவே காணப்படுகிறது. செவ்வாய் சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் ஏறக்குறைய பூமி கதிரவனைச் சுற்ற எடுக்கும் காலப்பகுதியைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதினால் காலநிலையும் இருமடங்காகின்றது. தொலைநோக்கி வாயிலாக செவ்வாயை உற்று நோக்கும் வேளையில் அது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும்.
இனிநாம் ஆராயவேண்டிய கிரகம் வியாழன் (JUPITOR) ஆகும். இதன் பருமன் ஏனைய கிரகங்களை விட பெரிதாக உள்ளதினால் இதனை ''ராட்சத கிரகம்'' (GIANT PLANET) என அழைக்கப்படுகின்றது.

இது தன்னைத்தானே ஒருமுறை சுற்ற ஒன்பது மணித்தியாலங்களும் ஐம்பத்து ஐந்து நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே இந்த ராட்சத கிரகம் பூமியை விட எவ்வளவு வேகமாகச் சுழலுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கலாம். அதேவேளை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர பதினொரு வருடங்களும் முந்நூற்று பதினைந்து நாட்களும் எடுக்கின்றது. வியாழனிலிருந்து கிடைக்கப்பெற்ற நிறமாலையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு அம்மோனியா, மெதேன் போன்ற வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். நாம் வாழுகின்ற பூமிக்கு ஒரே ஒரு உபகிரகம் உள்ளது. ஆனால் வியாழனுக்கு பதினாறு உபகிரகங்கள் சுற்றிவருவதாக அண்மையில் கண்டிபிடித்துள்ளனர்.
எமது ஆராயவேண்டிய பட்டியலில் அடுத்து வருவது யுரேனஸ் ஆகும். ஆயிரத்து எழுநூற்று எண்பத்தோராம் 1781 ஆண்டுவரை சூரிய குடும்பத்தில் ஆறு கிரகங்களே உள்ளன என்று நம்பியிருந்தனர். வில்லியம் ஹர்ஷா என்னும் விஞ்ஞானியினால் யுரேனஸ் என்ற கிரகம் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் விட்டம் நாற்பத்தெட்டாயிரம் 48000கிலோ மீற்றராகும். தன்னைத்தானே சுற்ற பத்து மணி நாற்பத்து எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனை ஒருமுறை சுற்ற எண்பத்து நான்கு வருடங்கள் செல்கின்றது. யுரேனெஸ்ஸிற்கு ஐந்து உப கிரகங்கள் உள்ளன.

அடுத்ததாக நெப்டியூனைப் பார்ப்போம். இக்கிரகம் ஆயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறாம் ஆண்டு பெர்லின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்த விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. நூற்று அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுற இது சூரியனைச் சுற்றி வருகின்றது. தன்னைத்தானே சுற்ற பதினைந்து மணி நாற்பது நிமிடங்களும் செல்லும். இக்கிரகம் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் நிலைகொண்டுள்ளதினால் எப்பொழுதும் குளிராகவே காணப்படுகின்றது.
இதற்கு இரண்டு உபகிரகங்கள் உள்ளன. இவ் உபகிரகங்களில் ஒன்று ஆறு நாட்களுக்கு ஒருமுறை தாய்க்கிரகத்தை எதிர்த்திசையில் வலம் வருகின்றது. நெப்டியூனை வெறுங்கண்களால் (Naked eyes) பார்க்க முடியாது. 

இனி இக்கால விஞ்ஞானிகளினால் கிரகங்கள் பட்டியலிலிருந்து துரதிஷ்டவசமாக நீக்கப்பட்ட புளூட்டோ பற்றி சிறிது ஆராய்வோம். இக்கிரகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாம்1930 ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தினரால் 8qனிtபிடிக்கப்பட்டது. இது சூரியனிலிருந்து ஐநூற்று எழுபத்தாறு கோடி கிலோ மீற்றர் தொலைதூரத்தில் உள்ளது.






இனி தற்கால விஞ்ஞானிகளினால் புளூட்டோ கிரகத்தை கோள்கள் பட்டியலிருந்து நீக்கியமைக்குரிய பிரதான காரணியைப் பார்ப்போம். அதாவது புளூட்டோவிற்கு கிரகங்களுக்கு இருக்க வேண்டிய தாற்பரியங்கள் மிகக் குறைவாகவே உள்ளதைக் குறிப்பிடலாம்.



இனி விண்துகள் பற்றிப் பார்ப்போம். அதாவது செவ்வாயின் பாதைக்கும் வியாழனின் பாதைக்கும் இடையில் வித்தியாசமான பருமனுடைய பல்லாயிரக்கணக்கான சிறு வஸ்துக்கள் ஏனைய கோள்களைப் போலவே சூரியனை ஒழுங்காகச் சுற்றி வருகின்றன. இவற்றையே விண்துகள்கள் என்று அழைக்கின்றனர்.



இறுதியாக விண்கற்கள் பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். வானத்தில் கரு முகில்கள் இல்லாது கோடான கோடி விண்மீன்கள் எம்மைப் பார்த்து கண் சிமிட்டுகின்ற வேளையில் நட்சத்திரம் போன்ற தோற்றமுடைய பொருளொன்று திடீரென்று புவியை நோக்கி மின்னல் வேகத்தில் வானவில்லில் உள்ள வர்ணங்களுடன் வீழ்வதைக் காண்கின்றோம். இதுதான் விண்கற்களாகும். சிறிய கற்களினால் பூமியில் வாழ்வோருக்கு பங்கம் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஆயிரத்து தொள்ளயிரத்து எட்டாம் ஆண்டு சைபீரியக்காட்டில் வீழ்ந்த பாரிய விண்கல்லினால் பெரும்சேதம் உண்டாகிவிட்டதை அறிகின்றோம்.

இதனால் ஏற்பட்ட குழி சுமார் நாற்பத்து ஐந்து கிலோ மீற்றர் விட்டம் உடையதாம். வனப் பிரதேசத்தில் வீழ்ந்த காரணத்தினால் மனித உயிர்களுக்கு அவ்வளவாக தேசம் ஏற்பட்டிருக்காது. ஆனால் நகர்ப்புறங்களிலோ அல்லது சமுகத்திரங்களோ ராட்சஷ விண்கற்கள் விழும் பட்சத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு விடும். கடலில் விழுகின்ற பாரிய பருமனுடைய விண்கல்லால் சுனாமி ஏற்படலாம். இதன் கொடூரத்தை நாம் இரண்டாயிரத்து நான்கு டிசம்பர் மாதம் நன்கு உணர்ந்து கொண்டோம் தானே!
பிரபஞ்சத்தில் உள்ள அற்புதங்களை விஞ்ஞானிகள் கண்டுகளிக்க தொழில்நுட்ப சாதனங்கள் உறுதுணை புரிகின்றன. அவற்றில் அதிசக்தி வாய்ந்த தொலை நோக்கி, ராடார், ராக்கெட்டில் ஏவப்படுகின்ற ‘ஸ்கை லாப்’ என்பனவற்றை விண்வெளி ஆய்வாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர் என்பது இந்நூற்றாண்டு வாழ் மக்கள் செய்த பெரும் பாக்கியம்.

சனி, 25 செப்டம்பர், 2010

Secrets of Stars நட்சத்திர ரகசியம்!

வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை எண்ண முடியாது. நட்சத்திரங்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் என்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இவற்றின சராசரி வயது 1500 கோடி ஆண்டுகள் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். இதில் பெரும்பாலான நட்சத்திரங்கள் பத்து லட்சம் முதல் 1000 கோடி ஆண்டுகள் ஆயுள் உடையவை. இந்த நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் 75 சதவிகிதமும், ஹீலியம் 22 சதவிகிதமும், ஆக்சிஜன், நியான், கார்பன் நைட்ரஜன் வாயுக்களும் சில பங்கு கலந்துள்ளன.
வானில் மின்னும் நட்சத்திரங்களில் சில சூரியனை விட நூறு மடங்கு அதிக எடை கொண்டவையாகும். சூரியனில் 20 ல் 1 பங்கு எடை கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.
சூரியனைத் தவிர்த்துவிட்டு, பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ஆல்பா செண்டாரி. இது பூமியில் இருந்து 4.3 ஒளி ஆண்டு தூரத்தில் உளள்து. ஒரு ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஓர் ஆண்டில் பயணிக்கும் தூரமாகும்.
நமக்கு மிகத் தூரத்தில் உள்ள நட்சத்திரம் தேனேப். இது பூமியில் இருந்து 1600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. ஆயினும் ‘மில்கிவே’ எனப்படும பால்வெளியில் 100 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளன.
நட்சத்திரங்களில் பிரகாசமானது சிரியஸ். 20 கி.மீ., விட்டம் முதல் 1600 கோடி கி.மீ., விட்டம்  வரை கொண்ட நட்சத்திரங்கள் வானில் மிதக்கின்றன. வெள்ளை, நீலம், மஞ்சள், சிகப்பு நிறங்களில் நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. நட்சத்திரத்தின் மேற்பகுதியில் காணப்படும் வெப்ப அளவின் அடிப்படையில் அதன் நிறம் மாறும்.
நட்சத்திரத்தின் நிறம் நீலம் என்றால் அதன் மேற்புறத்தில் 28 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் தகித்துக்கொண்டிருக்கிறது என்று பொருள். சிகப்பு நிறம் என்றால் 2800 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். நட்சத்திரங்களின் உள்பகுதியில் பொதுவாக 11 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் . அணுக்கள் வெடிப்பு மூலம் இந்த சக்தியை நட்சத்திரங்கள் பெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும்

சூரிய மண்டலத்தின்
சூழ்வெளிக் காலப் பின்னலில்
பம்பரங்கள்
சுற்றிவரும் விந்தை யென்ன ?
நீள் வட்ட வீதியில்
அண்டங்கள் தொழுதுவரும்
ஊழ்விதி என்ன ?
கோள்கள் அனைத்தும்
ஒருதிசை நோக்கி
ஒழுங்காய்ச் சுழல்வ தென்ன ?
ஒரே மட்டத்தில் அண்டக் கோள்கள்
பரிதி இடுப்பில்
கரகம் ஆடுவ தென்ன ?
யுரேனஸ் அச்சாணி செங்குத்தாய்
சரிந்து போன தென்ன ?
பரிதி மண்ட லத்தில்
புதன் கோள் மட்டும்
மாலை சுற்றும் ஈசலாய்க்
கோலமிடும் காட்சி என்ன ?
சனிக்கோள் ஆயிரம் ஆயிரம்
ஒளி வளையல்களைத்
தனித்துவமாய் அணிந்த தென்ன ?
தன்னச்சில் சுற்றாது
வெண்ணிலா
முன்னழகைக் காட்டிப்
பின்னழகை
மறைப்ப தென்ன ?
ஒளிச்சுருள் மந்தைகளை
ஒருங்கே கவர்ந்து கொள்ளும்
பிரபஞ்சச் சக்தி
ஈர்ப்பியல் சக்தி ! காலாக்ஸிகளை
விரைந்து செல்ல வைப்பது
எதிரான
விலக்கு விசை !
Anatomy of a Black Hole
பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பங்குப் பிண்டமாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒளிவீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து "ஒற்றை முடத்துவ" (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது.
விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)
“ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை.”
பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (1872-1970)
Fig. 1A
Black Hole Edge
“டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார் ! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார் ! அது இரு நூறாண்டுகள் நீடித்தன ! இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் ! எத்தனை ஆண்டுகளுக்கு அது நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது !”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)
“எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். எனது நியதி பிழையானது என்று நிரூபணமானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும் ! ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும் !”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)
Giant Black Hole in the Universe

கருந்துளைகள் முதன்முதல் கண்டுபிடிப்பு

1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி விழுங்கிவிடும்.
Black Hole Simulation

கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ? நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன ! அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு ! பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது ! ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ பின்தங்கி விடுகிறது.
What is A Black Hole

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ! ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பங்குப் பிண்டமாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒளிவீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து "ஒற்றை முடத்துவ" (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

கருந்துளை என்பது என்ன ?

ஒரு கருந்துளை என்பது அதன் ஈர்ப்பியல் ஆற்றலைத் தாண்டும் 'விடுதலை வேகத்துக்கு' (Escape Velocity) ஒப்பாகப் பெருத்துக் கதிர்வீசும் ஒரு மாயப் பிண்டச் சேமிப்பு (Huge Invisible Mass). சில விஞ்ஞானிகள் அதைக் 'கருஞ்சக்தி விண்மீண்' அல்லது 'மாய விண்மீன்' (Dark Energy Star OR Invisible Star) என்று அழைக்கிறார்.
Black Hole in Binary System

உதாரணமாக பூமியின் நிறைக்கேற்ப அதன் விடுதலை வேகம் : 11 கி.மீ./வினாடி (சுமார் 40,000 km/hour) (24000 mph) என்று கணக்கிடப் படுகிறது. அதாவது 11 கி.மீ./வினாடி வேகத்தில் செல்லும் ஒரு ராக்கெட் பூமியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டிச் செல்லும். அதாவது ஓர் அண்டத்தின் விடுதலை வேகம் அதன் திணிவு அடர்த்தியைச் (Compactness or Mass to Radius Ratio) சார்ந்தது. ஒரு கருந்துளையின் திணிவு அடர்த்தி (ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள்) ஒளிவேகம் கொண்ட துகள் கூட தாண்டிச் செல்ல முடியாதவாறு அசுர அளவில் மிகையானது ! அதாவது கருந்துளைகளின் ஈர்ப்பியல் சக்தியும் பேரளவு பெருத்தது !

எத்தனை வகையான கருந்துளைகள் உள்ளன ?

விண்வெளியில் வடிவத்தைச் சார்ந்து மூன்று விதமான கருந்துளைகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார் : 1. தாரகைக் கருந்துளைகள் (Stellar Black Holes), 2. பெருத்த கருந்துளைகள் (காலக்ஸி கருந்துளைகள்) (Supermassive Black Holes), 3. சிறுத்த கருந்துளைகள் (Miniature Black Holes) என்று மூவகைக் கருந்துளைகள் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளது. அவை வெவ்வேறு முறைகளில் தோன்றியவை.
Properties of Black Holes

தாரகைக் கருந்துளைகள் : நிறை கனத்தத் தாரகைகளே கருந்துளையாக மாறத் தகுதியுடையவை. நாலரை பில்லியன் ஆண்டுகள் கடந்து நமது பரிதியும் அணுக்கரு எரிசக்தி இழந்து ஆயுள் முடிந்து மரணம் அடையும். இம்மாதிரி விண்மீன்கள் இறுதியில் ஒளிவீசா வெண்குள்ளியாக (White Dwarf) மாறிவிடும் ! நமது பரிதியைப் போல் 20 மடங்கு நிறையுள்ள விண்மீன்கள் ஆயுள் முடிவில் கருந்துளையாகத் தோன்றிவிடலாம். நிறை கனத்த விண்மீன்களின் எரிசக்தி வற்றிய பிறகு தமது நிறைப் பளுவை அவை நீடிக்க முடியாது சிதைந்து போய் விடுகின்றன. நிறைக்கு ஏற்றவாறு சில விண்மீன்கள் சிதைவு அடையாமல் நியூட்ரான் விண்மீனாக மாறிவிடலாம். அல்லது சிதைந்து கொண்டே போய் முடிவில் ஒரு கருந்துளையாக ஆகலாம். இத்தகைய விதிக்கு உட்படும் நிறை வரையறை 2.5 மடங்கு பரிதி நிறை என்று அறியப்படுகிறது.
How Black Holes Form ?
காலக்ஸி கருந்துளைகள் : பெரும்பான்மையான காலக்ஸிகளின் மையத்தில் இருப்பவை பெருத்த கருந்துளை பரம்பரையைச் சேர்ந்தவர். நமது பால்வீதி காலக்ஸியின் நடுவிலும் ஒரு பெரும் கருந்துளை உள்ளது. காலக்ஸிகளின் மையத்தில் உள்ள தாரகைக் கூட்டங்கள் மிகையானவை. இரு தாரகைகளுக்கு உள்ள இடைத்தூரம் மிகப் பெரியது. இவையே பின்னால் பெருத்த ஒரு கருந்துளையாக மாறுகின்றன. காலக்ஸி மையத்தில் உள்ள ஏராளமான விண்மீன்கள் நிகழ்ச்சித் தொடுவானைச் சுற்றிவந்து கருந்துளையால் உறிஞ்சப்பட்டு நிறை இன்னும் மிகையாகிறது. கருந்துளையின் 'ஆப்பம்' போன்ற தட்டுக்குச் (Accretion Disk of the Black Hole) செங்குத்தாகச் சில சமயங்களில் இரண்டு வாயுக் கதிர்க் கணைகள் (Two Jets of Hot Gas) எழுந்திடும். அவற்றின் நீளம் மில்லியன் கணக்கான ஒளியாண்டு தூரங்கள் (Light Years) ! ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்ட காலக்ஸிக் காட்சிகள் பெருத்த நிறைக் கருந்துளைகள் (Supermassive Black Holes) இருப்பதற்குச் சிறந்த சான்றுகளாக இருக்கின்றன. யேல் பல்கலைக் கழகத்தின் (Yale University, USA) வானியல் பேராசிரியை டாக்டர் பிரியா நடராஜன் பெருத்த நிறைக் கருந்துளையின் உச்ச வரம்பு 10 பில்லியன் பரிதிகள் நிறை என்று கூறியிருக்கிறார்.
What is Gravity

சிறுத்த கருந்துளைகள் : சிறுத்த கருந்துளைகள் எப்படித் தோன்றின என்னும் கோட்பாடு இன்னும் தெளிவாக எழுதப்படவில்லை. பல்வேறு சிந்தனை முறைகள் சிபாரிசு செய்யப் பட்டுள்ளன. அவற்றின் அடிப்படை யாவும் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த பிரபஞ்சப் பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றியவை என்னும் கருத்தில் நிலவி வருகிறது. பிள்ளைப் பிரபஞ்சத்தில் சிற்சில பிண்டங்கள் மிக விரைவாக விரிந்து, மெதுவாக நகரும் பிண்டங்களைச் சுருக்கி மிகச்சிறு கருந்துளைகளாக மாற்றி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். சில விஞ்ஞானிகள் கருந்துளைகள் அவற்றின் நிறையளவைப் பொருத்து ஆவியாகி வெடித்து விடலாம் (Evaporate & Explode) என்று யூகிக்கிறார். மிகச்சிறு கருந்துளைகள் மட்டும் பிரபஞ்சத்தின் ஆயுள் முடிவதற்குள் ஆவியாகக் கூடும் என்று கருதப்படுகிறது. பிரபஞ்ச பெரு வெடிப்புக்குப் பிறகு தோன்றிய மிகச்சிறு கருந்துளைகள் ஆவியாக மாறி வெப்பச்சக்தி இழக்க வேண்டுமானால் (Black Hole Entropy) அவற்றின் நிறை 10^15 கிராம் அளவாக (2 டிரில்லியன் பவுண்டு) இருக்க வேண்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது ! ஆனால் புதிரான மிகச்சிறு கருந்துளைகளை இதுவரை விண்ணோக்கிகள் மூலம் யாரும் கண்டதாகத் தெரியவில்லை !
Black Holes at the Center of Galaxies

விண்மீன் கருந்துளைகள் எப்படி உண்டாகின்றன ?

மரணம் அடையும் சில விண்மீன்கள் ஒருவிதப் பொதுக் கருந்துளைகளை உண்டாக்கும். நமது பரிதியைப் போல் 20 மடங்கு நிறையுள்ள ஒரு விண்மீன் தன் ஆயுள் முடிவில் ஒரு கருந்துளையை உண்டாக்கலாம். ஒரு விண்மீனின் சாதாரண வாழ்வில் அதன் ஈர்ப்பியல் இழுப்புக்கும், உள்ளழுத்த விலக்குக்கும் (Gravitational Pulling & Pressure Pushing) எப்போதும் "இழுப்பு-விலக்குப் போர்" (Tug of War) நிகழ்ந்து வருகிறது ! விண்மீனின் எரிவாயு எரிந்து அணுக்கரு இயக்கச் சக்தி (Nuclear Reaction) தொடர்ந்து உள்ளழுத்த விலக்கு விசையை அளித்து வருகிறது. விண்மீனின் நீண்ட வாழ்வு பூராவும் பெரும்பான்மையாக ஈர்ப்பியலும், அழுத்தமும் ஒன்றை ஒன்று சமப்படுத்தி வந்துள்ளன ! ஆயுள் முடியும் போது விண்மீனில் ஹைடிரஜன் வாயு தீர்ந்து ஈர்ப்பியல் சக்தியின் வல்லமை ஓங்கி அதன் உட்கரு மேலும் சுருங்க ஆரம்பிக்கிறது ! அதாவது விண்மீனின் வடிவம் சுருங்கி திணிவு (Density) அடர்த்தியாகி தன் நிறையாலே சிதைவடைகிறது. மிகையான நிறையுள்ள விண்மீன் பேரளவு உட்கருச் சுருக்கம் பெறுகிறது.
Why Black Holes are Important ?

சிறிய விண்மீன்களில் எரிசக்தி சீக்கிரம் தீர்ந்து போய் எலெக்டிரான்களின் விலக்கு விசை விண்மீன் சுருக்கத்தை முடிவில் நிறுத்துகிறது. மரண நிலை அடையும் இச்சிறு விண்மீன் 'வெண்குள்ளி' (White Dwarf) என்று குறிப்பிடப்படுகிறது. அதே சமயத்தில் பெருநிறை கொண்ட விண்மீன் தன் எரிசக்தி முழுவதையும் இழக்கும் போது "சூப்பர்நோவா" (Supernova) வெடிப்பாக நிகழ்கிறது. அப்போது விண்மீனின் வெளிப்புறத்துப் பகுதியில் விண்வெளியில் எறியப்பட்டு உட்கரு சுருங்கிச் சிதைகிறது ! விண்மீனின் வடிவம் ஒரு புள்ளியாகி திணிவு கணிக்க இயலாத "முடிவின்மை அடர்த்தி" (Infinite Density) ஆகிறது ! அந்தப் புள்ளி நிலை "ஒற்றை முடத்துவம்" (Point of Singularity) என்று குறிப்பிடப் படுகிறது. அப்போது அதை மீறிச் செல்ல ஓர் அண்டத்துக்கு ஒளிவேகத்தையும் மிஞ்சிய வேகம் தேவைப்படுகிறது. விடுதலை வேகம் ஒளிவேகத்தை எட்டும் இடத்துக்கும் கருந்துளைப் புள்ளிக்கும் உள்ள தூரம் "நிகழ்ச்சித் தொடுவான்" (Event Horizon) என்று அழைக்கப் படுகிறது. நிகழ்ச்சித் தொடுவானில் ஒளியும் ஒளிவேகத்தில் புகும் எதுவும் கருந்துளையால் உடனே கவ்வி இழுத்துக் கொள்ளப்படும் !
Black Holes & Entropy

நியூட்டனின் பழைய ஈர்ப்பியல் விதி மாற்றமானது !

பதினேழாம் நூற்றாண்டில் ஐஸக் நியூட்டன் (1642--1727) தனது "பிரின்சிபியா மாதமாட்டிகா" (Principia Mathematica) என்னும் கணித நூலில் "ஈர்ப்பியல் விதியைப்" (Law of Gravity) பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். முன்னூறு ஆண்டுகளாக நியூட்டனின் ஈர்ப்பியல் விதி பெரும்பான்மையான வானோக்குக் காட்சிகளுக்கு ஒப்பியதாக இருந்தது. ஆனால் அது எல்லா ஐயங்களுக்கும் விடைகூறிப் பூரணம் அடையவில்லை. 230 ஆண்டுகளுக்குப் பிறகு 1916 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879--1955) தனது "பொது ஒப்பியல் நியதியை" (General Theory of Relativity) வெளியிட்டு நியூட்டனின் ஈர்ப்பியல் நியதியைக் "காலவெளி வளைவாக" (Space Time Curvature) மாற்றிக் காட்டினார் ! ஐன்ஸ்டைனின் நியதி "ஈர்ப்பியல் விசை" (Gravitational Force) எப்படியெல்லாம் இயங்குகிறது என்று விளக்கி தீராத பல்வேறு பிரச்சனைகளுக்கு விடைகள் கண்டுபிடித்தது. ஆனால் ஒப்பியல் நியதியும் இப்போது எல்லா வினாக்களுக்கும் விடை கூற முடியவில்லை ! சென்ற சில பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் ஈர்ப்பியல் விளைவுகளில் பற்பல புதிரான நிகழ்ச்சிகளைக் கண்டுள்ளதால் 21 ஆம் நூற்றாண்டில் ஒப்பியல் நியதியும் செப்பமிட வேண்டிய நிர்ப்பந்தம் வந்து விட்டது.

Mass Limit of Supermassive Black Holes
பரிதி மண்டலத்தில் புதிரான புதன் கோளின் சுற்றுவீதி !
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜான் ஜோஸ·ப் லெவெர்ரியர் (Jean Joseph LeVerrier) (1811--1877) பரிதிக்கு நெருங்கிய தீக்கோளான புதனின் நகர்ச்சி இடங்கள் வெவ்வேறாய்ப் புரியாமல் இருப்பதை நோக்கினார். புதன்கோள் பரிதியைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதை மாறிக் கொண்டே போனது ! சூரிய¨னைச் சுற்றிவரும் மற்ற அண்டக் கோள்கள் யாவும் ஏறக்குறைய ஒரே நீள்வட்டப் பாதையைப் பல பில்லியன் ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றன. சுற்றுவீதி வட்டமிடும் இந்த "புதன்கோள் முரண்பாடு" (Mercury Anomaly) ஏற்படக் காரணம் மற்ற அண்டக் கோள்களின் நுட்பமான ஈர்ப்பு விசைப் பாதிப்புகளே ! இரண்டு கோள்கள் உள்ள சுற்றுப் பாதைகளில் ஒரு கோள் மற்ற கோளை நீள்வட்டத்தில் சுற்றிவரும் என்று நியூட்டனின் விதிகள் முன்னறிவிக்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் அவ்விதம் மற்ற கோள்களின் ஈர்ப்பியல் கவர்ச்சிகளை எடுத்துக் கொள்ளும் போது நியூட்டனின் விதிகள் தவறாகி விடுகின்றன. அண்டக்கோள் நீள்வட்டப் பாதையை மேற்கொண்டாலும் அந்த நீள்வட்டமும் மற்ற கோள்களின் ஈர்ப்பு விசையால் வட்ட மிடுகிறது என்று அறியும் போது விந்தையாக இருக்கிறது.
Our Magnificent Milky Way
Galaxy

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.
1. Our Universe - National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe - What Creates Gravitational Waves ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope - Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science - Webster's New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies - An Astronomy Reference Book (2005)