வானில் மின்னும் நட்சத்திரங்களில் சில சூரியனை விட நூறு மடங்கு அதிக எடை கொண்டவையாகும். சூரியனில் 20 ல் 1 பங்கு எடை கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.
சூரியனைத் தவிர்த்துவிட்டு, பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ஆல்பா செண்டாரி. இது பூமியில் இருந்து 4.3 ஒளி ஆண்டு தூரத்தில் உளள்து. ஒரு ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஓர் ஆண்டில் பயணிக்கும் தூரமாகும்.
சூரியனைத் தவிர்த்துவிட்டு, பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ஆல்பா செண்டாரி. இது பூமியில் இருந்து 4.3 ஒளி ஆண்டு தூரத்தில் உளள்து. ஒரு ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஓர் ஆண்டில் பயணிக்கும் தூரமாகும்.
நமக்கு மிகத் தூரத்தில் உள்ள நட்சத்திரம் தேனேப். இது பூமியில் இருந்து 1600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. ஆயினும் ‘மில்கிவே’ எனப்படும பால்வெளியில் 100 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளன.
நட்சத்திரங்களில் பிரகாசமானது சிரியஸ். 20 கி.மீ., விட்டம் முதல் 1600 கோடி கி.மீ., விட்டம் வரை கொண்ட நட்சத்திரங்கள் வானில் மிதக்கின்றன. வெள்ளை, நீலம், மஞ்சள், சிகப்பு நிறங்களில் நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. நட்சத்திரத்தின் மேற்பகுதியில் காணப்படும் வெப்ப அளவின் அடிப்படையில் அதன் நிறம் மாறும்.
நட்சத்திரத்தின் நிறம் நீலம் என்றால் அதன் மேற்புறத்தில் 28 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் தகித்துக்கொண்டிருக்கிறது என்று பொருள். சிகப்பு நிறம் என்றால் 2800 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். நட்சத்திரங்களின் உள்பகுதியில் பொதுவாக 11 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் . அணுக்கள் வெடிப்பு மூலம் இந்த சக்தியை நட்சத்திரங்கள் பெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.